தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு கோவிட் தடுப்பூசிகள்........... - Global Tamil Voice உலக தமிழ் குரல்

தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு கோவிட் தடுப்பூசிகள்...........

வவுனியா தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு சுகாதாரப் பிரிவினரால் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று (13.07) காலை 8.30 மணி தொடக்கம் 1.30 மணி தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளன. சீன அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

 அவற்றை பல்வேறு மாவட்டங்களிலும் தேவையின் பொருட்டு பயன்படுத்துவதற்கான நடவடிக்கையினை சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளனர். அதனடிப்படையில், வவுனியா மாவட்டத்திலுள்ள தபால் திணைக்களத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், தபால் வழங்குநர்கள் ஆகியோருக்கு சினோபாம் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.




About UPDATE